சரத் பொன்சேகாவிற்கு பதவி வழங்கப்படுமா! மனம் திறந்தார் லால்காந்த
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு அரசாங்க பதவிகள் வழங்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் கே.டி. லால்காந்த விளக்கம் அளித்துள்ளார்.
சரத் பொன்சேகாவுடன் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள்
எனினும் பதவி வழங்குவது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் பதவியொன்றை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவரிடம் பேசவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சரத் பொன்சேகா எவ்வித பதவிகளையும் அரசாங்கத்திடம் இதுவரையில் கோரியதில்லை என கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.





தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
