சரண குணவர்த்தன தனக்கு எதிரான 16 ஆண்டு சிறைத் தண்டனை குறித்து மேன்முறையீடு
தனக்கு விதிக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனை மற்றும் அபராதங்களிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் பிரதி அமைச்சர் சரணா குணவர்தன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு மேன்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி ரஞ்சன் டி சில்வா மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேன்முறையீட்டு மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2006 ஆம் ஆண்டில் அபிவிருத்தி லொத்தர் சபைக்காக வாகனங்களைக் குத்தகை அடிப்படையில் கொள்முதல் செய்யும் நடைமுறையைப் பின்பற்றாமல் பெற்று, அரசாங்கத்திற்கு இழப்புகளை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நான்கு வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தது.
சிறைத் தண்டனை
வழக்குகளை விசாரித்த பின்னர், குற்றம் சாட்டப்பட்ட சரண குணவர்தன, சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, ஒவ்வொரு வழக்கிற்கும் நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.

அதன்படி, அவருக்கு 16 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்த மேல்நீதிமன்ற நீதிபதி, அதற்கு மேலதிகமாக. 1.8 மில்லியன் ரூபா அபராதமும் விதித்தார்.
மேற்குறித்த சிறைத்தண்டனை மற்றும் அபராதங்களிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி, சரண குணவர்தன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தற்போதைக்கு நான்கு மேன்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 23 மணி நேரம் முன்
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan