கராத்தே போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்த்துக் கொடுத்த சானுயா (Photos)
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் இலங்கையின் தமிழ் வீராங்கனையான சானுயா வெற்றிபெற்றுள்ளார்.
அதன்படி, இலங்கையின் தேசிய அணியில் இடம்பிடித்த சானுயா குறித்த கராத்தே போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிகொண்டார்.
புதுடெல்லியில் நடைபெற்ற போட்டியில் இந்தியா, சீனா, இலங்கை, பங்களாதேஷ், நோபாளம், யப்பான், ஓமான், பூட்டான், மலேசியா, குவைட், உஸ்பெகிஸ்தான் என 12 நாடுகள் பங்குபற்றியிருந்தன.
இதில் இலங்கை 5 வெள்ளி மற்றும் 11 வெங்கல பதக்கங்கள் என 16 பதக்கங்களை வென்றது. இதில் சானுயா வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.
சானுயாவை வழிநடத்திய ஆசிரியர் சென்சேய் விஜயராஜூக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு பெருமை
அண்மைக்காலமாக இலங்கையைச் சேர்தவர்கள் தனது திறைமைகளால் இலங்கைக்கு பெருமையை சேர்த்து வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழரான அர்ச்சிகன் என்ற மாணவன் தமிழர்கள் மத்தியில் பெருமை சேர்த்தார்.
மேலும் ஜோர்ஜியாவில் நடைபெற்ற 8 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பிரிவில் வாகையாளராக பிரித்தானியா வாழ் தமிழ் சிறுமி முதலாவது இடம் பிடித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |