இலங்கை மீண்டெழ இந்தியா தொடர்ந்து உதவிகள் வழங்கும் : ஜீவனிடம் சந்தோஷ் உறுதி
இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா தொடர்ந்து உதவிகளையும், ஒத்துழைப்புகளை வழங்கும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உறுதியளித்துள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பிக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போதே இந்தியத் தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.
உதவிக்கு வழங்கப்பட்ட நன்றி
இதேவேளை டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அயல் நாடான இந்தியா வழங்கிய உதவிகளுக்கு ஜீவன் தொண்டமான் எம்.பி. இதன்போது நன்றி தெரிவித்தார்.

அத்துடன், பேரிடரால் பெருந்தோட்டப் பகுதிகள் உட்பட மலையகத்தில் ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் இந்தியத் தூதுவருக்கு ஜீவன் தொண்டமான் எம்.பி. தெளிவுபடுத்தினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri