வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாந்தனின் உடல் இலங்கைக்கு
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனனின் உடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குப் பிறகே இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சாந்தனின் சகோதரர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வெள்ளிக்குப் பிறகே சாத்தியம்
தனது அண்ணாவின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படுவது வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாத்தியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுடைய தாயை பார்க்க வருபவர்கள் இரு தினங்கள் கழித்து வருமாறும் அவர் இதற்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதேவேளை, பிரேத பரிசோதனைகளின் பின்னர் சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
