சாந்தனின் உடலுக்கு நளினி உள்ளிட்ட பலரும் அஞ்சலி
புதிய இணைப்பு
இந்தியாவின் - தமிழ்நாடு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்த சாந்தனின் உடலுக்கு நளினி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 24ஆம் திகதி சாந்தனுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதன்படி, அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் சாந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முதலாம் இணைப்பு
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 24ஆம் திகதி சாந்தனுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. எனினும் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
32 வருடங்களாக காத்திருந்த நிலை
இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
சாந்தன் ஈழத்தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
பல முயற்சிகளின் கீழ் இலங்கை வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஜனவரி 24ம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சாந்தனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த சாந்தனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சிபிஐயின் கூற்று
சிபிஐயின் கூற்றுப்படி, “சாந்தன் சிவராசனுடன் ஏப்ரல் 1991 இல் தமிழ்நாட்டிற்கு வந்தார்.
சிவராசனுடன் நெருக்கமாக இருந்த புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் என்று குற்றப்பத்திரிக்கை அவரை விபரித்தது.
மேலும், பெப்ரவரி 1988 இல், சிவராசன், சாந்தனை மெட்ராஸில் (சென்னையில்) தொடருமாறு பரிந்துரைத்தார்.
அத்தோடு, பெப்ரவரி 1990 இல், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜியில் அனுமதி பெற்றார்.
அங்கு அவரது செலவுகளை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டனர். ராஜீவ் கொலைச் சதியில் சிவராசனுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக சாந்தன் மீது குற்றம் சாட்டப்பட்டது.” என்றுள்ளது.
சாந்தனின் உடல்
மேலும் சாந்தனின் வழக்கு தொடர்பில் முன்னனிலையான தமிழ்நாட்டு வழக்கறிஞர் புகழேந்தி கருத்து தெரிவிக்கையில்,
'' சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இன்று அல்லது நாளை அவரது உடல் இலங்கைக்கு அனுப்பப்படும்" என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |