கிளிநொச்சி சங்கீத்சன் கைது விவகாரம் : வடக்கு - கிழக்கு தழுவிய போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய கருத்துக்களைக் கொண்ட பாடலைப் பாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 24 வயதான சங்கீர்த்தனன் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம்(09.06.2026) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாபெரும் போராட்டத்திற்கு
மேலும் தெரிவிக்கையி்ல், நாட்டிலே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழே தமிழ் மக்கள் பல கொடுமைகளை அனுபவித்தார்கள். 2006இல் கிழக்கு மண்ணில் வாகரையிலும் 2009ஆம் ஆண்டு வடக்கிலும் தமிழ் கொலை செய்யப்படுவதற்கு இந்த பயங்கரவாத தடைச்சட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி தற்போது சங்கீத்சன் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டிலே பாடுகின்ற உரிமை பேசுகின்ற உரிமை எழுதுகின்ற உரிமை தடுக்கப்பட்டிருக்கின்றதா.
இன்றையதினம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இன்னும் மெருகூட்டுவதற்காகவே ஜனாதிபதி தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இன்று அவசரகால சட்டத்துடன் தொடர்புடைய பிரேரணையை இன்று கொண்டு வந்துள்ளார். அந்தவகையில் ஏன் ஜனாதிபதி தனக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்துக் கொண்டு சங்கீர்த்தனனை விடுவிக்கக் கூடாது.
தொடர்ந்தும் சங்கீத்சனின் விடுதலையை வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றார்கள்.
ஆகவே இந்த அரசாங்கம் சங்கீத்சனனை விடுதலை செய்யவில்லை என்றால் வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டத்திற்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள் என சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உணவகமொன்றில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து! மூவர் உயிரிழப்பு - மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதி