போர்க்குற்றவாளியான மகிந்த.. சர்ச்சையை கிளப்பியுள்ள இணையத்தள செய்தி
நாட்டில் நிலவிய பிரிவினைவாதத்தை போசித்த குழுவினருடன் எழுதப்படாத இணக்கப்பாட்டிலேயே அரசாங்கம் இயங்குவதாக மொட்டு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ஜீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்துரையாற்றிய அவர், "முன்னாள் ஜனாதிபதி மகிந்த கொழும்பு வீட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் செய்தித்தளம் ஒன்று வெளியிட்ட செய்தியில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் போர்க்குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டவருமான என்று மகிந்தவை குறிப்பிட்டிருந்தது.
இதில் என்ன தெரிகின்றதென்றால், நாட்டின் உள்ளேயும் வெளியிலும் பிரிவினைவாதிகள் சிவில் போரை முடிவுக்கு கொண்டு வந்தவரை குரோதத்துடனே நோக்குகின்றனர்.
விடுதலைப் புலிகளின் சிந்தனை
இலங்கையில் பிரிவினைவாத யுத்தத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் தோட்டகடிக்கப்பட்டாலும் பிரிவினைவாதத்திற்கான அவர்களின் சிந்தனை இன்று தோற்கடிக்கப்படவில்லை.
இது இலங்கையில் நடைபெற்ற சிவில் யுத்தத்திற்கு மட்டும் பொருந்துவதில்லை. உலகில் நடைபெற்ற பல பிரிவினைவாத பயங்கரவாத போர்களின் பின்னரான நிலைமையும் அவ்வாறே காணப்படுகிறது. அதனால் தான் பல வெளிநாடுகள் எமது நாட்டின் அரசியலுக்கு பெரும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
உதாரணமாக ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் எமக்கு எதிரான அறிக்கைகள் மற்றும் இலங்கை அரசியல் வாதிகள் சில நாடுகளுக்கு செல்கையில் தெரிவிக்கப்படும் எதிர்ப்புகள் மற்றும் யுத்தத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள், இராணுவ வீரர்களுக்கு விதிக்கப்படும் தடைகளையும் குறிப்பிடலாம். ஆனாலும் இந்த அரசாங்கம் பிரிவினைவாத சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றுவதாகவே தென்படுகிறது” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: குறிவைக்கப்பட்ட முக்கிய நகரங்கள் News Lankasri
