சுதந்திர சதுக்கத்தில் பரபரப்பு - பொலிஸாருடன் மோதலில் ஈடுப்பட்ட சிவில் செயற்பாட்டாளர்
மக்கள் மனுவில் கையெழுத்திடச் சென்ற சிவில் செயற்பாட்டாளர் சஞ்சய மகாவத்த உள்ளிட்ட சிலருக்கும் பொலிஸாருக்கும் இடையே பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(05.10.2026) கொழும்பு - சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் முதலீடு செய்யப்பட்ட பொதுமக்களின் பணத்தை விடுவிக்கக் கோரி நாடு முழுவதும் மக்கள் மனுவில் கையெழுத்துகளைப் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
10 இலட்சம் கையெழுத்துக்கள்
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சிவில் புலனாய்வு முன்னணியினால் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாய முதலீடுகளுக்காக பொதுமக்களின் பணத்தைப் பெற்ற சில நிறுவனங்களின் நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கி இடைநிறுத்தியதால் முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் முதலீட்டாளர்களுக்காக முன்னெடுக்கப்படும் இந்த மக்கள் மனுவில் மொத்தமாக 10 இலட்சம் கையெழுத்துகளைப் பெறுவதே இலக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் மனுவில் கையெழுத்திடச் சென்ற சஞ்சய மகாவத்த உள்ளிட்ட சிலருக்கும் பொலிஸாருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதால், குறித்த இடத்தில் பரபரப்பான நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.