பெண்களுக்கான சுகாதார துவாய்களுக்கான வரி! நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
நாட்டிற்குத் தேவைப்படும் சுகாதார துவாய்களில் 92 சதவீதமானவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதற்காக அரசாங்கம் எந்த வரியையும் அறவிடுவதில்லையென்றும் அவர் கூறினார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
மீதமான 8% மான சுகாதார துவாய்களே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் அதனை ஒரு நிறுவனம் மட்டுமே இறக்குமதி செய்யும் நிலையில் அதற்காக 22.5% வட்டி அறவிடுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டிலுள்ள 15 -- 47 வயதுக்கிடைப்பட்ட வயதுடைய பெண்களில் 40% மாணவர்கள் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்களுக்கான சுகாதார துவாய்களை பாவிப்பதை நிறுத்தியுள்ளனர் என்பது ஆய்வுகளின் மூலம் தெரிய வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |