சேவை நேரத்தில் விளையாட்டு போட்டிகளை நடாத்தும் சங்கானை பிரதேச செயலகம்: பொதுமக்கள் விசனம்
சங்கானை பிரதேச செயலகமானது மக்களுக்கான சேவை நேரத்தில் உத்தியோகத்தர்களிடையே விளையாட்டு போட்டிகளை நடாத்துவதால் சேவைகளை பெறுவதற்கு செல்லும் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக குற்றச்சாட்டக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், நேற்றையதினம் (20.20.2024) பிரதேச செயலகத்தில் கரம் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருகையில், பிரதேச செயலகங்ககளுக்கு இடையிலான போட்டிகள் எதிர்காலத்திலும் நடைபெறவுள்ளன.
சேவை நேரத்தில் விளையாட்டுப்போட்டிகள்
போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களை தெரிவு செய்வதற்கான தெரிவுப் போட்டிகளே இவ்வாறு சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகிறன.
மேலும், எதிர்காலத்தில் கரப்பந்தாட்டம், துடுப்பாட்டம், வலைப்பந்தாட்டம், காற்பந்தாட்டம் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இந்த போட்டிகளில் பங்குகொள்ளும் கிராம சேவகர்கள், சமுர்த்தி அலுவலரகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தகர்கள் அலுவலகங்களுக்கு செல்லாது போட்டிகளில் பங்குபற்றி வருவதாக கூறப்படுகின்றது.
சிரமத்தில் மக்கள்
இந்நிலையில் உத்தியோகத்தர்களை சந்திக்க வேண்டிய தேவையுள்ள மக்களை பிரதேச செயலகத்திற்கு அழைத்து, மக்களை சிரமங்களுக்கு உள்ளாக்குகின்றனர்.
இதன் காரணமாக மக்கள் வீண் அலைச்சல்களை எதிர்நோக்குவதான முறைப்பாடுகளும் எழுந்துள்ளன.
இதன்படி இவ்வாறான போட்டிகளை மக்களுக்கு சேவை செய்யும் நேரத்தில் நடத்தாது, அலுவலக நேரம் முடிந்த பின்னர், அல்லது விடுமுறை தினங்களில் நடத்தினால் மக்களது சேவைகள் பாதிக்காது செயற்பட முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |