சங்கானை பேருந்து நிலைய முச்சக்கரவண்டி விவகாரம்: உரிய பொறிமுறைகளுடன் தீர்வு

Jaffna Ceylon Electricity Board Northern Province of Sri Lanka
By Kajinthan Jul 24, 2025 03:16 AM GMT
Report

சங்கானை பேருந்து நிலையத்தில் பதிவின்றி சேவை மேற்கொள்ளும் முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் சங்கப் பதிவுப் பிரச்சினைக்கு உரிய பொறிமுறைகள் உள்ளீர்க்கப்படு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் ச.ஜெயந்தன் தெரிவித்துள்ளார்.

வலி. மேற்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் நேற்று(23) சுழிபுரத்திலுள்ள சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு விடயங்களை சபையில் பிரஸ்தாபித்த தவிசாளர், அவற்றின் சாதக பாதக நிலைகளை உறுப்பினர்களிடமிருந்து கோரியிருந்தார்.

இலங்கையில் தற்போது உள்ள புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் தற்போது உள்ள புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை

பொறிமுறை

இதன்போது குறித்த முச்சக்கர வண்டி சங்க பதிவுக்காக கிடைக்கப்பெற்ற கோரிக்கையை சபைக்கு பிரஸ்தாபித்து அதற்கான அனுமதி வழங்குவது குறித்து விவாதத்திற்கு விட்டிருந்தார்.

சங்கானை பேருந்து நிலைய முச்சக்கரவண்டி விவகாரம்: உரிய பொறிமுறைகளுடன் தீர்வு | Sanganai Bus Stand Three Wheeler Issue Solution

பல்வேறு வாதப்பிரதிவாதங்களின் இறுதியில் அப்பகுதி பிரதேச சபையின் நிலம் என்பதாலும் குறித்த இடம் பேருந்து நிலையமாக இருப்பதாலும் எதிர்கால சவால்களை கருத்தில் கொண்டு குறித்த இடத்தை நிரந்தர தரிப்பிடமாக வழங்காதிருக்கவும் அதற்கு ஈடாக புதிய ஓர் இடத்தில் புதிய ஒரு பொறிமுறையுடன் பேருந்து நிலையத்தில் இருந்து சேவையை முன்னெடுக்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சபையில் தீர்மானம் எடுக்கப்படுவதாக தவிசாளர் அறிவித்திருந்தார்.

இதனிடையே கடந்த கூட்ட அறிக்கை பிரஸ்தாபிக்கப்பட்ட போது சபையின் உறுப்பினர்களால் அதிகளவான தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டன. அத்துடன் உள்ளூராட்சி மன்ற அறிக்கையிடலில் உறுப்பினர்களுக்கிடையிலான வாதப்பிரதிவாதங்கள் கூட்டக் குறிப்பில் அறிக்கையிடப்படாமையை சுட்டிக்காட்டிய உறுப்பினர்கள், இவ்வாறான தவறுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், அதற்காக உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் மறைக்கப்படுவதான நிலையை உருவாக்குவதாகவும் சுட்டிக்காட்டியதுடன் அத்தகைய செயற்பாட்டுக்கு தமது கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் தகாத வார்த்தை

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் தகாத வார்த்தை

நிதி செலவு

மேலும் தனியார் கல்வி நிலைய பதிவு தொடர்பில் வலுயுறுத்தப்பட்டதுடன் வீதி விளக்கு பொருத்தல் பொருத்தல் தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளர் பராமரிப்பு மின்சார சபையின் அனுமதி பெற்ற தொழிலாளர்களை தவிர ஏனையோருக்கு தடைவிதித்துள்ளதாக அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

சங்கானை பேருந்து நிலைய முச்சக்கரவண்டி விவகாரம்: உரிய பொறிமுறைகளுடன் தீர்வு | Sanganai Bus Stand Three Wheeler Issue Solution

 இதற்கு சபை உறுப்பினர்கள் மின்சார சபைக்கு பெரும் நிதி செலவு கொடுக்கும் நிலை உருவாகும். இது சபையால் ஈடு செய்ய முடியாது.

ஆகவே மின்சார சபையின் பயிற்சிக்காக சபையால் சிலரை அனுப்பி பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் சங்கானை பொதுச்சந்தையை ஒரு குடைக்குள் கொண்டுவருவது மற்றும் வாகன தரிப்பிடம் உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டன.

தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல்கள்

தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல்கள்

வெள்ள நீர் பிரச்சினை

இதேவேளை, சங்கானை தானாவோடை கிராம மக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காணும் பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என வலி மேற்கு பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் துவாரகா ஜெயகாந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இப்பகுதியில் நீர் வழிந்தோட வடிகால் இருந்தும் உரிய திட்டமிடலோ முறையான பொறிமுறையோ இல்லாது அமைக்கப்பட்டுள்ள வடிகாலால் ஒவ்வொரு மழை காலத்திலும் ஏற்படும் வெள்ள நீரால் பாதிக்கப்படும் தமது இயல்வு வாழ்வை சீரமைத்துக்கொள்ள முயற்சிக்கும் சங்கானை கிழக்கு J/ 178 தானாவோடை கிராமத்தின் வெள்ள நீர் தேங்கலால் ஏற்படும் பிரச்சினைக்கு நிலையான தீர்வைக்காண பொறிமுறை ஒன்றை வகுக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்கப்பது அவசியம்.

சங்கானை பேருந்து நிலைய முச்சக்கரவண்டி விவகாரம்: உரிய பொறிமுறைகளுடன் தீர்வு | Sanganai Bus Stand Three Wheeler Issue Solution

குறிப்பாக J/178 சங்கானை கிழக்கு, தானாவோடை கிராமத்தில் தற்போது நிரந்தர காணிகளை கொண்டு வாழும் மக்கள் 1990 களில் காரைநகரில் இருந்து இடம்பெயர்ந்து நீதிவான் முகாமில் தற்காலிகமாக வாழ்ந்த மக்களாகவே இருக்கின்றனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழ்ந்துவரும் சுமார் 85 குடும்பங்களை கொண்ட இந்த மக்கள் தற்போது சங்கானை முருகமூர்தர்தி கோயில் அருகாமையில் உள்ள விவசாயக் காணிகளை தமது சொந்த முயற்சியில் கொள்வனவு செய்து தமக்கான நிரந்தர வாழ்வியலை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த மக்கள் தற்போது தமது வாழிடமாக குடியேறியுள்ள காணிகள் விவசாயக் காணிகளாக இருப்பதனால் வருடாவருடம் பெய்யும் மழை நீரால் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். இதனால் இந்த மக்களுக்கு வருடாவருடம் அனர்த்த உதவி திட்டங்கள் வழங்க வேண்டிய நிலையும் அரசு மற்றும் தனியாருக்கு ஏற்பட்டு வருகின்றது.

முன்னாள் போராளி வழங்கிய தகவல்! வவுனியாவில் மேலும் இருவர் கைது

முன்னாள் போராளி வழங்கிய தகவல்! வவுனியாவில் மேலும் இருவர் கைது

கோரிக்கை

இப்பகுதியில் நீர் வழிந்தோடுவதற்கு ஏற்றவகையில் வடிகால் ஒன்று உருவாக்கப்பட்டு வழுக்கையாற்றுடன் சங்கமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள போதும் அதனூடாக செல்லும் மழை நீர் முழுமையாக கடலை சென்றடைவதற்கான பொறிமுறையை கொண்டதாக அந்த வாய்க்கால் இல்லாமையே மழை நீர் மக்கள் வாழிடத்தில் நிரம்பி இந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்வை பாதிக்க காரணமாக இருக்கின்றது.

மக்களின் வாழ்வியலை முதன்மைப்படுத்தும் சபையாக எமது சபையின் செயற்பாடுகள் இருப்பதனால் இந்த மக்களின் வாழ்வியல் நலன்களை கருதிற்கொண்டு வந்து சேரும் மழை நீரை வடிந்தோடச் செய்வதற்காக வடக்கின் பெரிய ஆறு என கூறப்படும் வழுக்கையாற்றின் எல்லைவரை நீட்டிக்கப்பட்டுள்ள இப்பகுதியூடாகச் செல்லும் வாய்க்காலை தூர்வாரி, ஆழப்படுத்தி அதன் இரு பகுதிகளையும் வழிந்தோடும் நீரால் பாதிப்புறாத வகையில் நிலையான திட்டமிடலுடன் புனரமைத்து கொடுக்க எமது சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் சார்பாக எனது கோரிக்கை அமைகின்றது.

சங்கானை பேருந்து நிலைய முச்சக்கரவண்டி விவகாரம்: உரிய பொறிமுறைகளுடன் தீர்வு | Sanganai Bus Stand Three Wheeler Issue Solution

அந்தவகையில் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள மழைகாலத்திற்கு முன்னர் குறித்த பகுதி மக்களின் இயல்பான வாழ்வியலை கருத்திற்கொண்டு குறித்த வாய்க்காலை சீரமைக்க எமது சபை முதன்மைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதக்கது.

 குறித்த கோரிக்கையின் அவசியம் கருதி குறித்த நீர் வாய்க்காலின் தூர்வாரலை துறைசார் ஆலோசனை பெற்று தீர்வுகாண சபை அனுமதி கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

வெலிக்கடைப் படுகொலை குறித்தும் விசாரணை வேண்டும்! நாடாளுமன்றில் செல்வம் எம்பி. வலியுறுத்து

வெலிக்கடைப் படுகொலை குறித்தும் விசாரணை வேண்டும்! நாடாளுமன்றில் செல்வம் எம்பி. வலியுறுத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US