கொத்மலை பகுதியில் குவிந்துகிடக்கும் மணலை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை
டிட்வா சூறாவளி தாக்கம் காரணமாக கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் பாரியளவில் சேறு மற்றும் மணல் மலைபோல் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் நுவரெலியா மாவட்டத்தில் காணப்பட்ட மோசமான காலநிலை தாக்கத்தினால் இந்த நிலை இன்றும் மோசமடைந்துள்ளது.
மக்களின் கோரிக்கை
இவ்வாறு நிரம்பியிருக்கும் மணலை அபிவிருத்தி பணிகளுக்கென பயன்படுத்த முடியுமென அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மண்சரிவினால் ரம்பொடகம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெக்கோ இயந்திரம், இரண்டு லொறிகள், ஒரு வேன், மோட்டார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
இதுவரையில், காணாமல் போன வாகனங்களின் சிறு பாகங்களைக் கூட கண்டுபிடிக்க முடியாத நிலையில், குறித்த வாகனங்கள் நீரில் அடித்துச் சென்று நீர்த்தேக்கத்திற்கு அடியில் புதைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், மலைப்போன்று குவிந்து கிடக்கும் மண் கலந்த மணலை அகற்றி, காணாமல் போன வாகனங்களை கண்டுபிடித்து தருமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri