வடமராட்சியில் இரவில் நடந்த மணல் கடத்தல்- சாரதி தப்பியோட்டம்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கள்ள மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கலைத்துச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று(2)நள்ளிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சாரதி தப்பியோட்டம்
இரவு நேரங்களில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிசார் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று(2) நள்ளிரவு பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கள்ள மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை கைப்பற்ற முனைந்த போது வீதியில் மணலை கொட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
காணொளி அடிப்படையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.