தமிழர் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட பிரதேசசபை உறுப்பினர் (Photos)
மன்னார் -மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியில் பாரிய அளவு காடுகள் அழிக்கப்பட்டு அனுமதி இன்றி மணல் அகழ்வு இடம் பெற்றுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிராம மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் உட்பட்ட குழுவினர் மணல் அகழ்வை நிறுத்துவதற்காக நேற்று (3) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மன்னார் நானாட்டன் பிரதேச சபை உறுப்பினரினாலும், குறித்த மணல் அகழ்வை மேற்கொள்ளும் நபரினாலும் அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகளினால் அழுத்தங்களுக்கும் உள்ளக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இலுப்பை கடவை பொலிஸார் பிரசன்னமாகியிருந்த போதும் சம்மந்தப்பட்ட நபர் மீதோ சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டோர் மீதோ எந்த சட்ட நடவடிக்கையோ கைது நடவடிக்கையோ மேற்கொள்ளவில்லை என குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை கையகப்பட்டுத்த கூட பொலிஸார் முன்வரவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
உரிய அனுமதி இன்றி காடுகள் பல மாதங்களாக அழிக்கப்பட்டுள்ளதுடன் அரச காணியில் மணல் அகழ்வும் இடம்பெற்றுள்ள நிலையில் இலுப்பை கடவை பொலிஸாரோ வனவள திணைக்களமோ எந்த விதமான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கு சென்ற அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பை கூட வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த மணல் அகழ்வில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர் அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாரிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளும் காணொளியும் வெளியாகி உள்ளது.








இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
