சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக மக்கள் போராட்டம் (Photos)

Kilinochchi
By Erimalai Mar 02, 2023 06:46 PM GMT
Report

கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பேராலை கிராம பகுதியில்  நன்னீர் மீன் வளர்பபு எனும் போர்வையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்போது கிராமத்தில் அமைந்துள்ள புதுக்காட்டுக்குளத்திலிருந்தே அதிகளவான மணல் அகழ்வு செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நன்னீர் மீன்வளர்ப்பிற்காக இக்குளம் அபிவிருத்தி செய்யப்படுவதாக காண்பித்து, அங்கு மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தே கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் இன்று காலை 9 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றது.

சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக மக்கள் போராட்டம் (Photos) | Sand Mining In Kilinochchi

குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் கனரக வாகனங்களில் பெருந்தொகையான மணல் ஏற்றப்பட்டு வாகனங்கள் பயணிப்பது அவதானிக்கப்பட்ட நிலையில், குறித்த வாகனங்களை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த பகுதிக்கு சென்ற சிலர் போராட்டக்காரர்களை அச்சுறுத்தியதுடன், வாகனங்களை செலுத்தி மக்கள் மீது மோதும் வகையில் நடந்து கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

இதேவேளை போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் போராட்டக்காரர்களிற்கும், மண்ணகழ்வில் ஈடுபடும் தரப்பிற்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளது. 

 உள்ளுர் திணைக்களங்களிற்கு அறிவித்தல் ஏதும் வழங்கப்படாது, கொழும்பில் உள்ள அதிகாரிகளால் குறித்த பணிக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.

கமநலசேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த குளத்தின் அபிவிருத்தி தொடர்பில் தகவல் ஏதும் வழங்கப்படவில்லை என கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக மக்கள் போராட்டம் (Photos) | Sand Mining In Kilinochchi

இந்த நிலையில், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக்தினால் அப்பகுதியில் மண்ணகழ்விற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், குறித்த அனுமதி முறையற்றது எனவும், அனுமதிக்கப்பட்ட 4 அடிக்கு மேலாக 12 அடிவரை மண்ணகழ்வு சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

குறித்த போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் மூலம் அனுப்பி வைப்பதற்காக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.சயந்தினியிடம் கையளித்தனர்.

குறித்த சட்டத்திற்கு முரணானதும், கண்காணிப்பற்றும் மேற்கொள்ளப்படும் மணல் திருட்டினை உடனடியாக நிறுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US