கிளிநொச்சியில் இராணுவத்தினரிடம் சிக்கிய டிப்பர் வாகனங்கள் (Photos)
கிளிநொச்சியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த டிப்பர் வாகனங்கள் இரண்டும் இராணுவத்தினரால் இன்று (01.09.2023) செய்யப்பட்டதாக பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாற்று பகுதியில் இருந்து அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி செல்வது தொடர்பில் இராணுவத்தினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி மடக்கிப் பிடிக்கப்பட்ட டிப்பர் வாகன சாரதிகளும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





