ரஷ்யா மீது பொருளாதார தடை! ட்ரம்ப்பின் அடுத்த நகர்வு
உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மறுத்தால், ரஷ்யா மீது பொருளாதாரத் தடையை விதிக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் ரஷ்யா உடனடியான தீர்மானத்திற்கு வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எச்சரிக்கை உக்ரைன் போரில் ஈடுபட்டுள்ள ஏனைய நாடுகளுக்கும் பொருந்தும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
எனினும், போரில் ஈடுபட்டுள்ள ஏனைய நாடுகள் குறித்து அவர் விரிவாக எதனையும் கூறவில்லை.
சரிந்துள்ள ஏற்றுமதி
இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் ரஷ்யா பேச மறுத்தால், ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரியை விதிக்க ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

2024ஆம் ஆண்டில் முதல் 11 மாதங்களில் அமெரிக்காவுக்கான ரஷ்ய ஏற்றுமதி 2.9 பில்லியன் டொலர்களால் கடுமையாக சரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri