போராட்டக்காரர்களின் கை, கால்கள் உடைக்கப்படும்! சனத் நிஷாந்த எச்சரிக்கை
அரச கட்டிடங்களை கைப்பற்ற முயன்றால் போராட்டக்காரர்களின் கை, கால்கள் உடைக்கப்படும் என்று சனத் நிஷாந்த எம்.பி. எச்சரித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சண்டித்தனம் செய்ய இடமளிக்க முடியாது

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
போராட்டக்காரர்கள் அன்பு வழி போராட்டமொன்றை முன்னெடுப்பதாயின் அதற்கு எந்தத் தடையும் இல்லை.
தாம் விரும்பியவாறு அமைதி வழியில் போராட்டங்களை எவருக்கும் முன்னெடுக்க முடியும். அதற்கு எந்தத் தடையும் இல்லை.
அதனை விடுத்து சண்டித்தனம் செய்ய யாருக்கும் இடமளிக்க முடியாது.
அத்துடன் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை என்பவற்றை கைப்பற்ற முயன்றால் அவர்களின் கை, கால்களை உடைப்பதைத் தவிர வேறு வழியிருக்காது என்றும் சனத் நிஷாற்த எச்சரிக்கை விடுத்துள்ளார்
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri