ஆட்கொலை படைப்பிரிவு தொடர்பில் புதிய தகவலை சபையில் அம்பலப்படுத்திய சாணக்கியன்(Video)
ரிப்பொலி பிளட்ரூனில் இருந்த பத்து பத்து பேரை எடுத்து உருவாக்கப்பட்ட குழுவில், பிள்ளையானின் குழுவை சேர்ந்தவர்களும் இருந்ததாகவும், தீவுச்சேனை என்ற பகுதியிலேயே இதன் தலைமையகம் இருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச உரையாற்றும் போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தம்மிடமுள்ள சர்ச்சைக்குரிய குரல்பதிவுகள் உள்ளிட்ட சாட்சியங்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் சமர்ப்பிக்குமாறு சாணக்கியனுக்கு குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றும் போதே சாணக்கியன் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
ஆட்கொலை படைப்பிரிவு
அவர் மேலும் தெரிவிக்கையில், ஆட்கொலை படைப்பிரிவான ரிப்போலி பிளட்ரூனை எடுத்துக் கொண்டால், அது ஆரம்பித்தது இன்று நேற்று அல்ல. ரிப்போலி பிளட்ரூன் 2015ஆம் ஆண்டில் இருந்து செயற்பட்டு வருகின்றது. ரிப்போலி பிளட்ரூனில் காத்தான்குடியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் பாயிஸ் என்பவர் இருந்தார்.
ஏறாவூரை சேர்ந்த சமாட் என்பவர் இருந்தார். ஒட்டமாவடியை சேர்ந்த கலீல் என்பவர் இருந்தார். கலீல் என்ற நபர், பிள்ளையானுடன் இணைந்து, ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பாக பெயரிடப்பட்ட சந்தேகநபர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, அவர் கொலை செய்யப்பட்டார்.
ரிப்போலி பிளட்ரூன் ஊடாக காத்தான்குடி, மாத்திரமல்ல, மட்டக்களப்பில் பாரிய அளவில் மக்கள், தேவைக்கு ஏற்றவாறு கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு அறிக்கையும் ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிடவில்லை.
ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ரிப்போலி பிளட்ரூன் தொடர்பாக தகவல் வழங்கிய சாட்சிகள் தற்போது வெளியில் உள்ளனர். நாட்டின் ஏனைய மாவட்டங்களில் குண்டுகள் வெடிக்காத போது, ஏன் மட்டக்களப்பில் குண்டுவெடித்தது என்ற கேள்வி எழுந்தது.
கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு இந்த இஸ்லாமிய எதிர்ப்பு கடும்போக்குவாதி குழு தேவைப்பட்டது போன்று, 2015ஆம் ஆண்டு 10 ஆயிரம் வாக்குகளை கூட பெற முடியாத பிள்ளையானுக்கு, மீண்டும் வெற்றிபெறுவதற்கே மட்டக்களப்பும் குண்டுத் தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
ரோமன் கத்தோலிக்க தேவாலயம் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கான காரணம்
ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தை விடுத்து, சபைக்குரிய தேவாலயம் தாக்குதலுக்கு ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏனெனில் சபைகளுக்குரிய தேவாலயத்தை சேர்ந்த பலர் மட்டக்களப்பில் இருக்கின்றனர். பிள்ளையான் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கும் சிறையில் இருந்து வெளிவருவதற்குமே மட்டக்களப்பை தெரிவு செய்து தாக்குதல் நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஏன் தெரிவுசெய்யப்பட்டது? நாம் கூறும் விடயங்கள் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது எம்மை அல்ல. குறிப்பிடும் விடயங்கள் குறித்து விசாரணை நடத்துங்கள். அரச புலனாய்வு பிரிவிலுள்ள புலனாய்வு குழுவினர் 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ரிப்பொலி பிளட்ரூன் என்ற பெயரின் கீழ் இயங்கி வந்திருந்ததுடன், 2008ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் நிறைவடைந்த பின்னர், பாரிய கலவரமடைந்தனர்.
ரிப்பொலி பிளட்ரூனில் இருந்த பத்து பத்து பேரை எடுத்து உருவாக்கப்பட்ட குழுவில், பிள்ளையானின் குழுவை சேர்ந்தவர்களும் இருந்தனர். தீவுச்சேனை என்ற பகுதியிலேயே இதன் தலைமையகம் இருந்தது. ரிப்பொலி பிளட்ரூனை சேர்ந்தவர்களின் ஒலிப்பதிவுகள் வெளியில் ஊடகங்களிடம் இருக்கின்றன.
லசந்த விக்ரமதுங்கவின் கொலை, எக்னலிகொடவின் கொலை, கீத் நோயர் தொடர்பாக, முன்னாள் போராசிரியர் தம்பையா, முன்னாள் விரிவுரையாளர் ரவீந்திரன் போன்றவர்களும் இலக்கானமை தொடர்பாக பாரிய அளவான தகவல்கள் உள்ளன. நீதி அமைச்சர் என்மீது குற்றஞ்சாட்டுவதை விடுத்து, இந்த தகவல்கள் குறித்து உரிய விசாரணையை நடத்த வேண்டும் என கோருகின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
