பிரதான எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள முன்வரவேண்டும் : இரா.சாணக்கியன்

Anura Kumara Dissanayaka Sajith Premadasa Shanakiyan Rasamanickam Sri Lankan political crisis
By Kumar Feb 21, 2023 06:13 PM GMT
Report

தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட விடயத்தில் இலங்கையில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள முன்வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (21.02.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பிரதான எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள முன்வரவேண்டும் : இரா.சாணக்கியன் | Sanakiyan Rasamanikam Local Gorvenment Election

உள்ளூராட்சி சபை தேர்தல்

நாட்டினுடைய உள்ளூராட்சி சபை தேர்தல் மிகவும் சர்ச்சைக்கு மத்தியில் உள்ளது.

காலையில் தேர்தல் நடக்கும் என்று ஒரு அறிவித்தல் வரும், மாலையிலே தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்று ஒரு அறிவித்தல் வரும்.

அடுத்த நாள் காலையில் நீதிமன்றங்களை நாடுவதாக வரும், அடுத்த நாள் மாலை தேர்தல் ஆணைக்குழு தேர்தல் நடத்துவதற்கு தங்களுக்கு நிதி இல்லை என்று நீதிமன்றத்தில் சொல்வது போன்ற பல குழப்பமான நிலைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றது.

தேர்தலைப் பற்றி ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியிலே சில வேளைகளில் சலிப்பு தன்மைகள் வரலாம்.

பிரதான எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள முன்வரவேண்டும் : இரா.சாணக்கியன் | Sanakiyan Rasamanikam Local Gorvenment Election

ஆனால் எங்களுடைய நிலைப்பாடு நாங்கள் இந்த தேர்தலை நடத்த கூறி நிச்சயமாக அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தை கொடுப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

தெற்கின் இரண்டு எதிர்கட்சி

நாங்கள் இந்த அழுத்தங்களை கொடுப்பதுடன் சேர்த்து இன்று விசேடமாக முன்வைக்க விரும்பும் கோரிக்கை என்னவென்றால் தெற்கிலே இருக்கும் இரண்டு எதிர்கட்சிகளும் அதாவது ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இந்த இரு கட்சிகளும் தான் இன்று தெற்கிலே பிரதானமான கட்சிகளாக இருக்கின்றன.

இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையிலே தான் தெற்கிலே பாரிய போட்டித் தன்மை காணப்படுகின்றது.

மொட்டு கட்சியின் நாமல் ராஜபக்ச தற்பொழுது கூட்டங்களை நடத்தும் பொழுது நாங்கள் எங்களது வேட்பாளர்களுடன் சில நேரங்களிலே வீட்டிலே நடத்தும் சிறிய கூட்டங்களை விட சிறியதாகத்தான் அவர்கள் நடத்தும் கூட்டங்கள் இருக்கின்றது.

பிரதான எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள முன்வரவேண்டும் : இரா.சாணக்கியன் | Sanakiyan Rasamanikam Local Gorvenment Election

அவர்களுடைய கட்சியினுடைய நிலைப்பாட்டினை பார்க்கின்ற போது தெற்கிலே அவர்களுக்கு ஆதரவு இல்லை என்பது போன்று தான் தெரிகின்றது.

வடக்கு கிழக்கிலே மொட்டின் முகவராக செயல்படும் கப்பல், படகு, வீணை போன்ற இந்த சின்னங்களுக்கு மக்கள் மத்தியிலே பாரிய எதிர்ப்பு இருப்பதாக அறியக் கூடியதாக இருந்தது.

மொட்டு கட்சியானது இன்று காலி மாவட்டத்தில் அவர்கள் சுயேட்சை குழுவின் ஊடாக சில பிரதேச சபைகளை ஃபுட்பால் சின்னம், அன்னாசி சின்னத்தில் போட்டியிடுவதாகவும் மொட்டு சின்னம் பயன்படுத்துவது மிக குறைவாக காணப்படுகின்றது.

தலைமைத்துவம்

இவ்வாறான் நிலையில் இன்று நாட்டிலே தெற்கின் உடைய தலைமைத்துவம் என்று சொன்னால் என்னுடைய பார்வையிலே அனுரகுமார திசாநாயக்க உடைய கட்சி சஜித் பிரேமதாசவினுடைய கட்சியும் இவர்கள் இருவரும் தான்.

இவர்களுக்கு இடையில் தான் போட்டி நடக்கும் என்று சொன்னால் பொதுவாக ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அனுரகுமார திசநாயக்கவினுடைய கட்சியை விமர்சிப்பதும், அனுரகுமார திசாநாயக்க கட்சியில் இருப்பவர்களும் வேட்பாளர்களும் சஜித் பிரேமதாசாவின் கட்சியை விமர்சிப்பதும் நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.

இதற்கான காரணம் இந்த இரண்டு கட்சிகளும் தான் பிரதானமாக எதிராக போட்டியிடும் கட்சிகள். மொட்டு கட்சியினுடைய செல்வாக்கை இவர்கள் குறைக்க வேண்டும்.

பிரதான எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள முன்வரவேண்டும் : இரா.சாணக்கியன் | Sanakiyan Rasamanikam Local Gorvenment Election

அதற்காக மொட்டு கட்சியினுடைய செயற்பாடுகளை விமர்சிப்பதை விட அவர்களுக்கிடையே தற்பொழுது போட்டித் தன்மை நிலவிக் கொண்டிருக்கின்றது . அது அரசியலில் வழமை தான்.

தற்பொழுது தேர்தல் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கின்ற நடவடிக்கையில் எதிர்க்கட்சியில் இருக்கும் ஆக வயது குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் நான் தான் என்னுடைய அன்பான வேண்டுகோள் ஒன்றினை இந்த இடத்திலேயே முன்வைக்க விரும்புகின்றேன்.

எதிர்க்கட்சித் தலைமைத்துவத்துக்கு கூறுவது ஒரு பொது மேடையிலே நீங்கள் இருவரும் இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்பதை அரசாங்கத்திற்கு வலியுறுத்தும் செயல்பாட்டினை பொதுவாக இரண்டு கட்சிகளும் சேர்ந்து செய்தால் நாங்கள் இதிலே வெற்றி காணக்கூடியதாக இருக்கும்.

நாட்டினுடைய ஜனநாயகம்

இந்த நாட்டினுடைய ஜனநாயகத்தை மதித்து ரணில் விக்ரமசிங்க அவர்கள் செயல்படுவதாக இருந்தால் தேர்தலை நடத்தி இருக்க வேண்டும்.

அண்மையிலே கண்டியில் ஜனரஜ பெரஹரவில் அரசாங்கத்தின் சின்னத்தினை ஒரு யானை மீது வைத்து ஒரு ஊர்வலம் சென்று பல இலங்கை மக்களுடைய பணங்களை லட்சக்கான கோடிக்கணக்கான பணங்களை அதற்கு செலவழித்து இருக்கின்றார்.

அதற்கு முதல் சுதந்திர தின நிகழ்விற்கு 200 பில்லியனுக்கு அதிகமான பணத்தினை செலவழித்திருக்கின்றார்.

தற்பொழுதும் கூட ராஜாங்க அமைச்சர், அமைச்சர் அரசாங்க வாகனங்கள், அரசாங்கத்தினுடைய சலுகைகளை பெறுவதற்கு லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் மக்களது வரிப்பணத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

பிரதான எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள முன்வரவேண்டும் : இரா.சாணக்கியன் | Sanakiyan Rasamanikam Local Gorvenment Election

இவ்வாறான நேரத்தில் ரணில் விக்ரமசிங்க தேர்தலுக்கான நிதியினை வழங்கியிருக்க வேண்டும். ரணில் விக்ரமசிங்க தேர்தலுக்கான நிதியினை வழங்கவிட்டால் நாட்டினுடைய அரசாங்கம் எதிர்காலத்தில் நாட்டில் நிதி இல்லை அதனால் நாங்கள் ஜனாதிபதி தேர்தலை இப்போது நடத்த மாட்டோம் நான் தொடர்ச்சியாக ஜனாதிபதியாக இருப்போம் என்று ரணில் விக்ரமசிங்கே கூறலாம்.

நாடு வங்குரோத்து நிலை

இல்லையெனில் நாடு வங்குரோத்தில் இருக்கின்ற பொழுது தேர்தல் நடத்த முடியாது. அதனால் நாடு சுபிட்சமான பாதைக்கு வந்த பிற்பாடு தேர்தல்களை நடத்துவோம் என ஜனாதிபதி கூறுவாராக இருந்தால் அவரே நாட்டை தொடர்ந்தும் வங்குரோத்து நிலையில் வைத்திருக்கலாம்.

தான் நாட்டினுடைய தலைவராக இருக்க வேண்டும் என்பதற்காக நாட்டில் பணம் இல்லை என்று பணம் வரும்வரை தேர்தலை நடத்த மாட்டோம் என நாட்டினை வங்குரோத்து நிலையில் வைத்திருக்கலாம்.

இவ்வாறான நிலையில் எங்களுடைய பிரதானமான இன்று தெற்கினுடைய தலைமைத்துவம் நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சி , வடக்கு கிழக்கிலே மக்களை ஒன்று திரட்டுவது இந்த தேர்தலை வேண்டும் என்று வலியுறுத்து செயற்பாடுகளுக்கு நாங்கள் தலைமைத்துவம் நிச்சயமாக வழங்குவோம்.

பிரதான எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள முன்வரவேண்டும் : இரா.சாணக்கியன் | Sanakiyan Rasamanikam Local Gorvenment Election

ஏனென்றால் வடக்குக் கிழக்கிலே பிரதானமானது எங்களுடைய கட்சி தான் ஆனால் தெற்கில் நாங்கள் செய்வதற்கு எங்களுக்கு முடியும்.

ஆனால் தெற்கில் இருக்கும் பிரதேசங்களிலே பிரதானமாக இன்று மக்களுடைய ஆதரவையும் செல்வாக்கையும் இரண்டு கட்சிகளுக்கும் இருக்கின்றதை நாங்கள் மறுக்க முடியாது.

விமல் வீரவங்ச போன்றவருடைய கட்சி எல்லாம் கூட்டங்கள் நடத்துவதாக நாங்கள் காணவில்லை அவர்கள் கூட்டம் நடத்தும் போதெல்லாம் அடிவாங்கி திரும்பி வருகின்ற வரலாறுகள் தான் கடந்த காலங்களிலே இடம்பெற்றது.

இந்த பல விடயங்களை மக்களுடைய கவனத்திற்கு சொல்வதற்கே இந்த கட்சிகளுக்கு இருக்கின்றது நாங்கள் அதனை வடக்கு கிழக்கில் செய்கின்றோம்

இன்று மின்சாரத்தினுடைய விலை அதிகரித்திருக்கின்றது.கிட்டத்தட்ட ஐந்து மடங்கு செலவு அதிகரித்து இருக்கின்றது. நீர் வழங்கள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று ஒரு அறிக்கை வழங்கி இருக்கின்றார் நீருக்கான கட்டண பணத்தினை அதிகரிக்க வேண்டும் என கூறி இருக்கின்றார்.

இன்று நாட்டினுடைய எரிபொருள் 150 இல் இருந்து 400 வரை அதிகரித்து இருக்கின்றது. மக்கள் வாழ முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

முகநூலில் ஒரு பதிவு ஒன்றை பார்த்திருந்தேன்.

50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்று அப்போது எரிபொருள், பால்மா போன்றவைகளை வாங்கி வாழ்க்கையை நடத்தினோம். தற்பொழுது அதே ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் மாத்திரம் கிடைக்கின்றது.

ஆனால் இந்த வருமானத்தை வைத்து தற்போது இருக்கின்ற விலைவாசிகளுக்கு வாழ்ந்தால் நாங்கள் ஒரு அதிசய பிறவி என பதிவிட்டிருந்தார்கள்.

ஒவ்வொரு மாதமும் அன்றாட செலவுகளை ஈடு செய்வதற்கு தொடர்ச்சியாக கடனாளிகளாக மக்கள் மாறிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த கடன் தொகை அதிகரித்து போகின்ற பட்சத்தில் காணிகளை விற்பார்கள் வீடுகளை விற்பார்கள் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? எங்களுடைய மட்டக்களப்பு மாநகர சபையிலே வசிக்கும் மக்களும் உண்மையிலே சிரமத்திற்கு மத்தியில் வாழுகின்றார்கள்.

கிராமப்புறங்களில் இருக்கின்றவர்கள் வீட்டுத்தோட்டம் இருக்கும், தென்னை மரங்கள் இருக்கும் அல்லது வாவிகள் இருக்கும் அல்லது கடலல் தொழிக்கு செல்வார்கள் இருப்பார்கள் இவ்வாறாக அவர்களுக்கு கஷ்டங்கள் இருந்தாலும் இவ்வாறாக தங்களுடைய வாழ்க்கையை முன்னெடுக்கின்றார்கள்.

ஆனால் நகர்ப்புறத்தில் இருப்பவர்களுக்கு எரிவாயு வேண்டும். மின்சாரத்தை நம்பியே உண்மையில் இருக்க வேண்டும் அவர்களுடைய வீட்டிலேயே வீட்டுத்தோட்டம் செய்வதற்கான சூழல் இல்லை. பலர் அன்றாட கூலி தொழிலுக்கு செல்பவர்கள். அவ்வாறான கஷ்டப்பட்ட மக்கள் நாடு முழுவதும் இருக்கின்றார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் ஜனநாயக வழியில் மக்களுக்கு தங்களது எதிர்ப்பை காட்டுவதற்கு ஜனநாய ரீதியாக கிடைக்கின்ற சந்தர்ப்பம் தான் தேர்தல்.

தேர்தல் நடத்த வேண்டும்

இந்த தேர்தலை பிற்படுவதற்கு ரணில் விக்ரமசிங்கவினுடைய ஆட்சியில் இருக்கின்ற அமைச்சர்மார் முயற்சி எடுக்கின்ற பொழுது நிச்சயமாக இந்த தேர்தல் நடத்த வேண்டும் என்கின்ற விடயத்திலாவது பிரதானமாக மக்களுக்கு தெற்கிலே இருக்கும் தலைமைத்துவம் வழங்குகின்ற நிலையிலே இருக்கும் சஜித் பிரேமதாச மற்றும் அனுகுமார திசநாயக்க ஆகியோர் ஒன்றாக இணைந்து அவர்களது கட்சியிலே இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் ஒன்றாக இணைந்து தேர்தல் நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த தேர்தல் நடத்த வேண்டும் என்பது இருவர்களுடைய கையிலே ஆட்சி செல்வதற்கு நாங்கள் அழகு பார்ப்பதற்கு அல்ல. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி இந்த அரசாங்கம் மக்களுடைய ஆணையை இழந்த ஒரு அரசாங்கம் என்று சொல்வதற்காகவே நாங்கள் தேர்தலை நடத்த வேண்டும் என கூறுகின்றோம்.

அந்த அடிப்படையில் வடக்குக் கிழக்கிலே இருக்கும் வேட்பாளர்களுக்கு குறிப்பாக பல பொய்கைகள் சமூக வலைத்தளங்களில் இடப்படுகின்றது.

நேற்றைய தினம் கூட முஸ்லிம் காங்கிரசினுடைய தலைவர் ரவூப் ஹக்கீம் ஏதோ ஒரு உடன்படிக்கையை செய்து அதில் இந்த பிரதேச சபைக்கு தீர்மானம் எடுத்ததாக போலியான செய்திகள் முகநூலிலே தமிழ் மக்கள் விடுதலை புலிகளை கட்சியினுடைய சில ஆதரவாளர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.

நாங்கள் இவ்வாறான பொய்யான கருத்துக்களை வெளியிலே போடுகிறவருக்கு உண்மையிலேயே சட்ட நடவடிக்கை எடுக்கிற வழியாக வரும். ஏனென்றால் நாட்டினுடைய தமிழ் மக்களுக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் தலைமைத்துவம் வழங்கும் இரண்டு கட்சிகளை பற்றி போலியான விடயங்களை எழுதி அதை எதுவித நடவடிக்கையும் இல்லாமல் போய்விட்டால் இந்த நாட்டிலே அனைத்து பொய்களை நம்பக்கூடிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்திலே அந்த பிரதேச சபைக்கான ஒரு திட்டம் மாத்திரமே பேசப்பட்டது.

கிழக்கு மாகாணம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை அவ்வாறு கிழக்கு மாகாணத்தை பற்றி பேசுவதாக இருந்தால் நிச்சயமாக நானும் அந்த இடத்தில் இருந்திருப்பேன்.

இவ்வாறான பொய்களை எழுதி கடந்த காலத்தில் மக்களை ஏமாற்றியதை போல அதிலும் இன்னொரு விடயமும் எழுதப்பட்டிருந்தது. மாகாண சபையிலே யார் முதலமைச்சர் என்றெல்லாம் பேசப்பட்டது.

அண்மையிலே மிகத் தெளிவாக தெரிய வந்த விடயம் என்னவென்றால் நசீர் அஹமட் தான் முதலமைச்சராகுவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான்தான் வாக்குமூலம் வழங்கி இருக்கின்றார் என நசீர் அஹமட் கூறாயிருக்கின்றார்.

இவ்வாறான உண்மைகளை மறைப்பதற்கு பொய்களை மக்கள் மத்தியில் சொல்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

மக்கள் தேர்தல் ஒன்றுக்கு தயாராக இருக்க வேண்டும். தேர்தல் நடக்காது என அலட்சியமாக இருக்க முடியாது. தேர்தலை நாங்கள் நடத்த வேண்டும். ஏனென்றால் இந்த தேர்தல் ஒன்று நடந்தால் தான் நாங்கள் எங்களுடைய எதிர்காலங்களிலே எங்களுடைய வேலை திட்டங்களை எடுத்து ரணில் விக்ரமசிங்கவிற்கு அழுத்தம் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

விஷேடமாக வடக்கு கிழக்கிலே வாழும் மக்கள் எங்களுடைய அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதாக இருந்தால் தமிழ் அரசுக் கட்சிக்கு வீட்டு சின்னத்துக்கு தான் சர்வதேசம் எல்லாம் தெரிந்த ஒரு கட்சி 75 வருடங்களாக தெரிந்த கட்சி நான் உள்நாட்டுக்குள்ளே தெரிந்த கட்சி.

போராட்டங்கள்

தமிழ் மக்களினுடைய அங்கீகாரம் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளினுடைய விடயங்கள் காணமலாக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு நாங்கள் முன்வைக்கும் கருத்துக்களை கேட்கும் கோரிக்கைகளை நியாயமானதை நிறைவேற்றப்பட வேண்டும் என்கின்ற அங்கீகாரம் ஜனநாயக ரீதியிலே கொடுக்கும் தேர்தலே மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி.

இந்தத் தேர்தலில் மக்கள் எங்களுடைய கட்சியின் முழுமையான ஆதரவை தர வேண்டும்.

தேர்தல் நடக்கும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு ஒரு வாரம் இருவாரம் தேர்தல் பின் போடப்பட்டாலும் தேர்தல் நிச்சயமாக இடம்பெறும்.

தேர்தல் நடக்காவிட்டால் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் போய்விடும் பல போராட்டங்கள் வெடிக்கும். போராட்டக்காரர்கள் மீண்டும் களத்துக்கு வருவார்கள்.

அவர்கள் வரும்பொழுது கடந்த முறையை போல் அல்லாமல் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸ்ஸாநாயக்க, தமிழ் தேசிய கூட்டமை நாங்கள் இணைந்து இந்த அரசுக்கு எதிரான போராட்டங்களை தேர்தல் நடத்தும் வேண்டும் என்பதில் நாங்கள் கைகோர்த்து செய்ய வேண்டும் என்பதுதான் எனது அன்பான வேண்டுகோள்.

பொதுவாக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியையும் பல போராட்டங்கள் இடம்பெறும், அவர்கள் அவர்களுடைய எதிர்ப்பினை நாடாளுமன்ற உள்ளே காட்டி இருக்கின்றார்கள்.

பிரதான எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள முன்வரவேண்டும் : இரா.சாணக்கியன் | Sanakiyan Rasamanikam Local Gorvenment Election

அது குறித்து பெரிதாக சொல்வதற்கு இல்லை. வடக்கு கிழக்கு என்பது தமிழ் மக்கள் பூர்வீமாக வாழ்ந்த பிரதேசம் எங்களுக்கு இந்த பிரதேசத்தில் சம உரித்து இருக்க வேண்டும் எங்களுக்கு உரித்திருக்கின்றது .

நாங்கள் மக்கள் என்பதனால் இதுதான் எங்களுடைய கட்சியினுடைய நிலைப்பாடு அதற்கு இந்தியாவினுடைய ஆதரவு தொடர்ச்சியாக இருக்கின்றது இந்தியாவினுடைய கரிசனை இருந்திருக்கின்றது.

எதிர்வரும் காலங்களில் நிச்சயமாக எங்களுடைய மக்களுக்காக இந்தியாவினுடைய குரல் இருக்கும்.அவர்களின் கைகளில் இருக்கின்றார்கள் என்று சொன்னால் இந்தியாவினுடைய கரிசனை தமிழர்கள் மீதும் வடக்கு கிழக்கு மக்கள் மீதும் இருக்கும் என்பதனை நாங்கள் எடுத்துக் கொள்ளலாம் என நம்புகின்றேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US