எரிபொருள் வழங்க கோரி சமுர்த்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்(Photo)
எரிபொருள் வழங்க கோரி வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய தினம்(30) காலை முதல் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இன்றைய தினம்(01) வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக எரிபொருளை பெற்றுத்தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோரிக்கைகள்
போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
எரிபொருளை பெற்றுத் தராவிடில் உலக வங்கியின் ரூபா 5000 கொடுப்பனவை வழங்குவதிலிருந்து விலக நேரிடும்.
அத்தியாவசிய சேவையில் உள்ளடக்கப்பட்டுள்ள தமக்கு எரிபொருளை பிரதேச செயலாளர் பெற்றுத்தர வேண்டும்.
போராட்டம்
அரசினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தற்போதைய உதவி திட்டங்களை நடைமுறைப்படுத்த, கண்காணிக்க எமக்கு எரிபொருளை பெற்றுத்தர வேண்டும். என கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
வல்வெட்டித்துறை சமுர்த்தி வங்கி கள பணியாளர்கள், பருத்தித்துறை சமுர்த்தி கள
பணியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.