ஈழத்தமிழர்களின் நிலையை சீரமைப்பது தொடர்பில் விசேட ஆலோசனை கூட்டம்
மணிப்பூர் முன்னாள் முதலமைச்சர் ராதாபினோத் கொய்ஜாம் (Radhabinod Koijam) தலைமையிலான மனிதவுரிமை குழுவுடன் சமதா கட்சி மற்றும் ஈழத்தமிழர் நட்புறவு மையம் இணைந்து ஆலோசனை கூட்டமொன்றினை நடத்தியுள்ளது.
குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.
ஈழத் தமிழர்கள் நிலையை எவ்வாறு சீரமைப்பது என்பது குறித்தும் இந்தியா முழுவதும் உள்ள, மனித உரிமை மீறல்களை எதிர்க்கின்ற அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைப்பதற்கான வியூகங்கள் இதன்போது வகுக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தில் மணிப்பூர் மாநில முன்னாள் முதலமைச்சர் ராதாபினோத் கொய்ஜாம், சமதா கட்சியின் அகில இந்திய முதன்மை பொதுச்செயலாளர் என்.ஏ.கோன் (N.A. Conn), ஈழத் தமிழர் நட்புறவு மைய பிரதிநிதிகள் பேராசிரியர் ரா.மு.மணிவண்ணன் (Manivannan) மற்றும் பொன்னம்பலம் (Ponnambalam), கே.டி.சிங் (K.D.Singh), இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ், கோவா (ஓய்வு), லெப்டினென்ட் ஜெனரல் ஹிமாலை கொன்சம் (ஓய்வு) மற்றும் பப்லு லோய்டோங்பாம் (Pablo Loydongbaum), எக்சிகுடிவ் டைரக்டர், ஹியூமன் ரைட்ஸ் அலெர்ட் - மணிப்பூர் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri