நிலமைகள் தொடர்ந்தால் அணிதிரண்டு போராடுவோம்: சம்பந்தன் எச்சரிக்கை
தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வருகின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்தும் திட்டமிட்ட கெடுபிடிகள் நீடிப்பதற்கு இடமளிக்க முடியாது என இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிலமைகள் தொடர்ந்தால் அகிம்சை வழியில் மக்கள் தமது உரிமைகளுக்காக அணிதிரண்டு போராடும் நிலைமைகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் தேரர்கள் பௌத்த நிர்மாணங்களை மேற்கொள்வதற்குத் தொடர்ச்சியாக முனைப்புக்களைச் செய்து பதற்றமான சூழல்களை உருவாக்கி வருகின்றமை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான பேச்சுகளின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் 13ஆவது திருத்தச் சட்டம், அதிகாரப்பகிர்வு தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிடும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சரித்திர ரீதியில் வாழ்ந்து வருகின்றார்கள். ஆகவே அவர்கள் தமது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு உள்ளக சுயநிர்ணய உரிமையைக் கோருவதற்கு உரித்துடையவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
