பெயரளவிலேயே சம்பந்தன் தமிழர்களின் தலைவராக இருக்கிறார்: சிவநேசதுரை சந்திரகாந்தன்

By Kumar Oct 29, 2021 07:32 AM GMT
Report

பெயரளவிலே தமிழர்களின் தலைவன் என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற சம்பந்தனின் திருகோணமலை மாவட்டம் தமிழர்களின் அடையாளமே இல்லாமல் போகின்ற துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியுதவியில் பொது அமைப்புகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுமார் 16 பொது அமைப்புகளுக்கு 13 இலட்சம் 50 ஆயிரம் ரூபா பெறுமதியாக உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதில் வாழ்வாதார உபகரணங்கள், அலுவலக உபகரணங்கள், விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் என பல்வேறு வகையான உபகரணங்கள் வழங்கிவைக்கிவைக்கப்பட்டன.

அத்துடன் இந்துக்கலாசார திணைக்களம் ஊடாக இரண்டு ஆலயங்களுக்கான நிதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன் வாழ்வாதாரத்தினை மேம்பாட்டுக்கான நிதியுதவியும் வழங்கிவைக்கப்பட்டன.

சௌபாக்கிய உற்பத்தி கிராமம் வேலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கான சானிறிதழ்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த சந்திரகாந்தன் எம்.பி. இந்த மாவட்டம் கிராமிய பொருளாதாரம், விவசாயத்தில் தங்கியுள்ள மாவட்டம். இந்த நாட்டின் உணவுத்தேவைக்கான பெருமளவான அரிசியை வழங்கும் மாவட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கம் கொள்கை ரீதியான ஒரு முடிவை எடுத்தால் அந்த முடிவினால் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு என்ன நன்மை, அந்த முடிவினால் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதையே நாம் பார்க்க வேண்டும்.

யூரியா பாவனையால் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது, மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது. மருத்துவ சங்கத்தின் ஆய்வின்படி பாடசாலைச் சிறுவர்களுக்கு 20 வீதமளவில் சிறுநீரகம் செயலிழப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

இன்னும் இருபது வருடங்களில் சிறுநீரகங்கள் செயலிழந்துவிடும். சேதனப் பசளை திட்டத்தினால் சில பிரச்சினைகள் உள்ளன. அதனை நாம் வெல்வோம்.

வயலுக்குள் குலைகளை வெட்டி மாட்டெரு, ஆட்டெரு என்பவற்றை போட்டு கடின உழைப்பை செய்தால் நான்கைந்து வருடங்களுக்கு நல்ல விளைச்சலை பெற முடியும். அதனால் நோய்களும் ஏற்படாது. சுகாதாரச் செலவுகள் குறைவடையும். ஆயுளும் அதிகரிக்கும்.

அதனை விடுத்து அசேதனப்பசளைகளால் நாற்பது வயதிலேயே நீரிழிவு, சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படுகின்றது. நூறு, இருநூறு ஆண்டுகளில் இது பெரும் சமூக அழிவாக மாறும்.

இப்படியான சூழலில் தமிழ்த் தேசியம் பேசுபவர்களும் புலம் பெயர்ந்தவர்களும் இயற்கைக் கழிவுகளையும் ஆட்டெரு, மாட்டெரு, இலைகுலை கழிவுகளை பயன்படுத்தி சேதனப் பசளையை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை ஆரம்பித்து அதன் மூலம் வேலைவாய்ப்புகளையும் வழங்கி முழு இலங்கைக்கும் சேதனப் பசளையை விநியோகிக்க முடியும்.

அதனை விடுத்து இந்த போலித் தேசியவாதிகள் விவசாயிகளை கொல்லாதே, குழி தோண்டி புதைக்காதே என கைகளில் பதாகைகளுடன் கோஷமிடுகின்றனர்.

உண்மையான தேசியம் என்பது அரச கொள்கையோடு சேர்ந்து மக்களை வாழவைப்பதாகும். போலித் தேசியம் பேசுகின்றவர்கள் தங்களால் முடிந்தால் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேசி நாங்கள் இங்கு வழங்குகின்ற பத்து ஏக்கர் காணிகளை பயன்படுத்தி சேதனப் பசளையை உற்பத்தி செய்யும்படி கூறுங்கள். இங்கிருக்கின்ற பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும்படி கூறுங்கள்.   

முழு நாட்டிற்கும் உரத்தை வழங்கக்கூடிய நிறுவனமாக மாற்றினால் நாங்கள் மட்டக்களப்பில் தீர்மானிக்கின்ற சக்தியாக வர்த்தகத்தில் மேம்பட முடியும்.

உரத்தை போடாமல் செய்து மக்களை நாளை பட்டினிச் சாவிற்குள் தள்ள வேண்டாம். நல்ல முடிவுகளை எடுக்கின்ற போது அதிலிருக்கும் கசப்பான விடயங்களை மாத்திரம் எடுக்காமல் அதனை தாண்டி சமுதாய நலன் பற்றி சிந்திக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமான தேச நலனோடு ஒட்டி மட்டக்களப்பு, கிழக்கு மாகாணத்தை வாழவைக்க வேண்டும். நாங்கள் வரலாறுகளையும் இனிய தமிழையும் பேசுவதால் தொடர்ந்தும் கிழக்கு மாகாணத் தமிழர்களை மேம்படுத்த முடியாது.

நடைமுறைச் சாத்தியமான பொருளாதார ரீதியான கல்வி ரீதியான மாற்றத்தை செய்ய வேண்டுமானால் மட்டக்களப்பு தமிழர்களின் ஒத்துழைப்பு மிகமிக அத்தியாவசியமாக இருக்கின்றது. அதற்கு அரசியல் தீர்மானங்கள் மிக முக்கியமாக இருக்கின்றது.

இன்று பெயரளவிலே தமிழர்களின் தலைவன் என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற சம்பந்தனின் திருகோணமலை மாவட்டம் தமிழர்களின் அடையாளமே இல்லாமல் போகின்ற துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றது.

அவர் இறக்கின்ற போது விட்டுச்செல்கின்ற விடயம் யாதெனில் திருகோணமலையை அழித்துவிட்டுச் சாகின்றேன் என்பதாகும். தமிழர்களை வாழவைத்துவிட்டுச் செல்கின்றேன் என அவரால் நிச்சயம் சொல்ல முடியாது.

முதலமைச்சராக நான் இருந்த போது நூறு ஏக்கர் காணியை பெற்று மாகாணசபையை மட்டக்களப்பிற்கு மாற்ற இருந்தேன். பின்னர் ஒரு கட்டத்தில் அது தேவையில்லை என்ற முடிவிற்கு வந்தேன்.

மாகாணசபையை மத்திய மாவட்டமாகிய திருகோணமலையிலிருந்து நகர்த்திவிட்டால் அங்கு சம்பந்தனின் வீடுகூட இல்லாமல் போகக்கூடிய சூழல் இருக்கின்றது. சிங்கள மக்கள் ஆட்சியமைக்கின்றார்கள் என்பதற்காக இதனை சொல்லவில்லை.

தமிழர்களுக்கான வேலைத்திட்டம் அங்கில்லை. விவசாயிகளுக்கோ மீன்பிடியாளர்களுக்கோ நம்பிக்கை தரக்கூடிய தலைவர்கள் அங்கில்லை. காணி பிடித்து விற்பவர்களும் போதைக்கு அடிமையாகி உழைப்பவர்களுமே அங்கும் இருக்கின்றார்கள்.

ஆகையால் போலியாக இயங்காமல் உண்மையாக நேர்மையாக இயங்க வேண்டும் இல்லாவிட்டால் விட்டு விட்டு வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் பேரப்பிள்ளைகளோடு வாழ வேண்டும்.

இந்த மண்ணில் நாங்கள் வாழ்கின்றோம் என்ற அடிப்படையில் இந்த மண்ணிலிருந்து தான் வருமானத்தை ஈட்ட வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஊட்டி சிறந்த பொருளாதாரம், கல்வியை கொடுப்பதற்கான சூழலை உருவாக்க நாம் பாடுபடவேண்டும்.

இங்கு குடும்ப பிணக்குகள் அதிகமாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் குறைக்கக்கூடிய அறிவு சார்ந்த மாற்றங்களை உருவாக்கி தனித்துவமாக வாழக்கூடிய பொருளாதாரக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு உங்களோடு இணைந்து நானும் பாடுபடுவேன்.

எங்களால் எடுக்கப்படுகின்ற முடிவுகளுக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்குவது போல எங்களால் வழங்கப்படுகின்ற பொருட்களும் சரியாக பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளர் வி.வாசுதேவன் (V.Vasudevan) தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம் அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன் (Sudarshan),தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் (P.Prasanthan),கட்சியின் இணைப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US