சம்மாந்துறை பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
வீடொன்றில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இளம் குடும்பஸ்தர் மரணமடைந்த சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 71 ஏ மல் 15 வீதி புளொக் மேற்கு-2 பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (16) இரவு 10.45 மணியளவில் குறித்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
ரிப்பிட்டர் ரக துப்பாக்கியே குறித்த கொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்தள்ளது.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் என கூறப்படும் சந்தேகநபரான சகோதரரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த துப்பாக்கி பிரயோகம் சகோதரர்களிடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 25 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
