இறுதி நேரத்தில் ஜெய்சங்கருடனான சந்திப்பில் பங்கேற்காத சம்பந்தன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் (R. Sampanthan) திடீர் சுகயீனம் காரணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடனான சந்திப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று (20.06.2024) மாலை 5 மணியளவில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் முக்கியஸ்தர்களைச் சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் தலைவர்கள் எட்டுப்பேர் உள்ளடங்கிய பேராளர்களுடன் சிறந்த சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இச்சந்திப்பில் இணைந்துகொண்டமைக்காக திருவாளர்கள் @ShanakiyanR, @Mavai_S, @MASumanthiran, @ImShritharan, @SAdaikalanathan, தர்மலிங்கம்… https://t.co/Ke7toqUHJm
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 20, 2024
திடீர் சுகயீனம்
இதனடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் தலைவர்கள் எட்டுப்பேருடன் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது, வடக்கு - கிழக்கு நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்படட்டுள்ளது.

இந்நிலையில், மேற்படி சந்திப்பில் இரா.சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
You May Like This,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam