முள்ளிவாய்க்கால் சம்பவத்தை கடுமையாக கண்டிக்கும் இந்திய சமதா கட்சி
முள்ளிவாய்காலில் தூபி அமைக்க இலங்கை அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இந்திய சமதா கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
முள்ளிவாய்க்கால் சம்பவத்தைக் கண்டித்து இன்று எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும்,
இலங்கை வடமாகாணத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் உள்ள நினைவு முற்றத்திலிருந்த நினைவு ஸ்தூபி நேற்று அதிகாலை சேதப்படுத்தப் பட்டுள்ளது.
பொது நினைவுக்கல் நடுவதற்காக நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கொண்டு வரப்பட்டிருந்த நினைவுக் கல்லும், இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி அமைந்துள்ள நினைவு முற்றத்தின் நான்கு பகுதிகளிலும் இராணுவம் நிறுத்தப்பட்டு அப்பகுதிக்குள் நுழைய இராணுவத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதான வீதியிலிருந்து நினைவு முற்றத்துக்குச் செல்லும் வீதிகளில் ஆயுதம் தாங்கிய படையினர் நிறுத்தப்பட்டு உள்ளே எவரும் செல்ல முடியாது தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, முள்ளிவாய்க்கால் கிராமத்துக்குச் செல்வோர் வேறு பாதைகளில் செல்லுமாறு இராணுவத்தால் பணிக்கப்படுகின்றார்கள்.
இது தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை சமதா கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. நாம் இலங்கை அரசுக்கு விடுக்கும் வேண்டுகோளாவது,
முள்ளிவாய்காலில் தமிழ் மக்களுக்கு நிலையான சுதந்திரத்தை அளிக்க வேண்டும்.
தமிழ் மக்களின் மனநிலையைச் சிறிதளவும் சீர்குலைக்கக் கூடாது. அவர்களின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது.
முள்ளிவாய்காலில் ஸ்தூபி அமைக்க இலங்கை அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
