விவசாயிகளை நடுத்தெருவுக்கு கொண்டுவந்த கோட்டாபய அரசாங்கம்: சமன் ரத்னபிரிய சீற்றம்
எதிர்காலத்தில் ஆட்சிக்கும் எந்த அரசாங்கத்தினாலும் கட்டியெழுப்பு முடியாத அளவுக்கு தற்போதைய அரசாங்கம் நாட்டை அழித்து விட்டது என அரச தாதி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய(Saman ratnapriya) குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் உள்ள அனைத்து பிரதான துறைகளும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது.
சார் உட்பட முழு அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளது. இந்தியா, அமெரிக்க மற்றும் சீனாவுக்கு நாட்டின் அனைத்து வளங்களும் அடகு வைக்கப்பட்டு விட்டது.
அரசாங்கம் முழு கமத்தொழில் துறையையும் அழித்து உழவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துள்ளது. இனிவரும் காலம் இந்த அரசாங்கம் உழவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ளும் காலம் எனவும் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam