ஐக்கிய மக்கள் சக்தி பேருவளை கூட்டத்தில் கூச்சல் குழப்பம்
ஐக்கிய மக்கள் சக்தி பேருவளை தொகுதி கட்சிக் கூட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.பேருவளை, ஹெட்டிமுல்லையில் உள்ள ஒரு தனியார் விழா மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றுள்ளது.
ஏற்பட்ட பதற்றம்
பேருவளை தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் இப்திகார் ஜமீல் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்ப்பு தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்வலர்கள் அவருக்கு எதிராக கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
கூட்டத்தில் காரசாரமான வார்த்தைப் பிரயோகங்களால் அமைதியின்மை ஏற்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கூட்டணியில் உருவாக்கப்பட்ட பேருவளை மாநகர சபை ஆட்சிக்கு பேருவளை தேர்தல் தொகுதி அமைப்பாளர் பொறுப்பு கூற வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இதனால் கூட்டணிக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam