கிளிநொச்சியில் உப்புக்கு பெரும் தட்டுப்பாடு
அண்மைக்காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உப்புக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சில வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ உப்பு மாத்திரமே ஒருவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, ஒரு கிலோ உப்பு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் பெரும் கவலை தெரிவித்துள்ளார்.
உப்புக்கு தட்டுப்பாடு
சில அரசியல்வாதிகளால் கடந்த மாதம் 28ஆம் திகதி முதல் ஆணையிறவு உப்பு அனைவரும் கைகளில் என கூறப்பட்டிருந்த போதிலும் இதுவரையில் ஒரு கிலோ உப்பை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலை தொடருமாயின் தேங்காய்க்கு ஏற்பட்ட தட்டுப்பாடு போன்று உப்புக்கும் இதே நிலை ஏற்படும் என நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan