நாட்டில் தீவிரமடையும் உப்பு தட்டுப்பாடு : பேக்கரி தொழிற் துறை கடும் பாதிப்பு
நாட்டில் நிலவி வரும் உப்பு தட்டுப்பாடு பேக்கரி உற்பத்திகளை பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஹோட்டல் கைத்தொழிற்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கும் உப்பு பற்றாக்குறை பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உப்பு கொள்வனவு செய்வதற்காக நேரத்தை செலவிட நேரிட்டுள்ளதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பல்பொருள் அங்காடிகளுக்கு பணியாளர்களை அனுப்பி நேரத்தை விரயம் செய்து உப்பு கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாரியளவிலான பேக்கரி உற்பத்தியாளர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 200 கிலோ கிராம் எடையுடைய உப்பு தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
பேக்கரி மற்றம் ஹோட்டல்துறையைச் சார்ந்தவர்கள் உப்பை களஞ்சியப்படுத்துவதனால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு உப்பு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

முடிவுக்கு வரப்போகும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சன் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
