ஜனாதிபதியிடம் கையளிக்காவிட்டால் இராஜினாமா சட்டபூர்வமானதில்லை! சாலிய பீரிஸ்
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், அமைச்சரவைக்கும் என்ன நடக்கின்றது என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய கடப்பாடு உள்ளதாக சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவை தவிர்ந்த, அமைச்சரவையிலுள்ள அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் பின்னணியில் இவ்வாறு அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடமே கையளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த இராஜினாமா சட்டபூர்வமானதில்லை.
அமைச்சர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கும்போதே அவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டனர் என கருதப்படும்.
அமைச்சர்கள் பிரதமரிடம் தங்கள் இராஜினாமாவை கையளித்துள்ளனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அப்படியானால் இந்த இராஜினாமாக்கள் சட்டபூர்வ தன்மையை கொண்டவையில்லை.
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் என்ன நடக்கின்றது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய கடப்பாடு உள்ளது.
எங்கள் நாட்டினாலும் பொருளாதாரத்தினாலும் இந்த நிச்சயமற்ற நிலையை தாங்கமுடியாது என நான் கருதுகின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
