அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்தக் கோரி கையெழுத்து வேட்டை
அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்தக் கோரி தொழில் வல்லுநர்களின் தேசிய முன்னணி உடன் தேசிய வளங்களை பாதுகாக்கும் கூட்டணி இணைந்து இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
‘தேசிய வளங்களை பாதுகாத்திட முழு நாடும் உச்ச நீதிமன்றத்தை நாடி- 10 லட்சம் பொதுமக்கள் கையெழுத்துக்களை கொண்ட மனுவில் கையெழுத்திடல்’ எனும் தொனிப் பொருளில் ஸ்ரீலங்கா டெலிகாம், அரச வங்கிகள், இலங்கை தபால், ஸ்ரீPலங்கா காப்புறுதி நிறுவனம் மற்றும் இலங்கை மின்சார சபை மற்றும் அதன் நிறுவனங்கள் ஆகியவற்றின் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
நீதிமன்றில் வழக்கு தாக்கல்
10 இலட்சம் கையெழுத்துக்களை கொண்ட மகஜர் ஒன்றினைக் கொண்டு அரசு சொத்துக்களை விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
குறித்த மனுவில் தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |