எரிவாயு தட்டுப்பாட்டினால் இணையத்தில் விறகு விற்பனை
நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு காணப்படும் தட்டுப்பாட்டு நிலைமையினால் இணைய வழியாக விறகு விற்பனை செய்யப்படுகின்றது.
இணைய வழியாக மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் பிரபல நிறுவனமொன்று இவ்வாறு விறகு விற்பனையில் ஈடுபட்டுள்ளது.
ஒரு கட்டு (ஐந்து கிலோ கிராம்) விறகு 140 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மண் அடிப்புடன் ஒரு கட்டு விறகு 390 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இணைய வழியாக விறகு விற்பனை செய்ய முடியும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் துலித் ஹேரத் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதிலும் சமையல் எரிவாயுவிற்கு கடுமையான தட்டுப்பாடு நீடித்து வரும் நிலையில் இவ்வாறு இணைய வழியாக விறகு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
