மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த போதைப்பொருள் விற்பனை(Photos)
யாழ்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த கஞ்சா கலந்த மாவா போதைப் பொருளுடன் யாழ் மாவட்ட போலீஸ் புலனாய்வாளர்களால் ஒருவர் கைது!
பாடசாலை மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த 3.5 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவா யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கஞ்சா கலந்த மாவா பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சா கலந்த மாவா
யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கரின் கீழ் செயற்படும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கென பொட்டலங்களாக கட்டப்பட்டு தயாராக இருந்த 3 கிலோ 500 கிராம் எடை உடைய கஞ்சா கலந்த மாவா பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தான் தொடர்ச்சியாக பாடசாலை மாணவர்களுக்கு இந்த மாவா பொருளை விற்பனை செய்வதாகவும் தனக்கு இதனால் அதிக லாபம் கிடைப்பதாகவும் நீண்ட காலமாக இந்த தொழிலை மறைமுகமாக செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட
சந்தேகநபரை விசாரணைகளின் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார்
நடவடிக்கை எடுத்துள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
