ஸ்ரீலங்கன் எயார்லைஸ் நிறுவனத்திடம் உள்ள 2 பிரிவுகளை விற்பனை செய்ய தீர்மானம்!
ஸ்ரீலங்கன் எயார்லைஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 2 பிரிவுகளை விற்பனை செய்ய ஸ்ரீலங்கன் எயார்லைஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, ஸ்ரீலங்கன் சமையல் கேட்டரிங் மற்றும் தரை சேவை கையாளுகை பிரிவு ஆகியவற்றின் 49 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பெறப்படும் பணத்தில் நிறுவனத்தின் கடனை தீர்க்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தொகை
இதற்கமைய, தரை சேவை கையாளுகை பிரிவை தனி நிறுவனமாக நிறுவி அதன் ஒரு பகுதியை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் நிறுவனத்தை மீட்பதற்கு இதுவே சிறந்த நடவடிக்கையாகும் என்றும் இந்த இரண்டு பிரிவுகளும் தற்போது இலாபத்தில் இயங்குவதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவையின் தற்போதைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் 966 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri