மாணவர்களுக்கு கல்வியை புகட்டுவதில் நடைமுறை சிக்கல்!ருவான் விஜேவர்தன
பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னதாக சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் தொடர்ந்தும் இணைய வழி கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொண்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு கல்வியை புகட்டுவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தொனியை உயர்த்திப் பேசுவதனால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் புத்திசாதூரியமாக சிந்திப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆசிரியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் உயர்த்தியது எனவும், 2020ம் ஆண்டில் சம்பள முரண்பாடுகளை களைய திட்டமிட்டிருந்த போதிலும் 2019ம் ஆண்டில் ஆட்சி கவிழ்ந்த காரணத்தினால் எதனையும் செய்ய முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.