அரச பணியாளர்களுக்கான சம்பள உயர்வுக்கு நிதியொதுக்கீடு
2027ஆம் ஆண்டில் அரச பணியாளர் சம்பள உயர்வுகளுக்காக 110 மில்லியன் ரூபாய்களை ஒதுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டிலும் சம்பள உயர்வுகளுக்கு அதே தொகை ஒதுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டம்
நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 41ஆவது ஆண்டு மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மாற்றத்திற்கான அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி திசாநாயக்க, அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் நவீன பொது சேவையை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொது நிர்வாகத்திற்குள் நவீனத்துவ கலாசாரத்தை புகுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், பொது சேவையைப் பாதுகாக்கவும் புத்துயிர் பெறவும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் திருவிழா




