அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் வெளியான அறிவிப்பு
அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் (2026) உள்ளடக்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பின் அடுத்த கட்டத்தை இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சம்பள முரண்பாடு
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை முற்றாக நீக்குவதற்காக துரிதப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நிதி அமைச்சராக செயற்படும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், அதன் இரண்டாம் வாசிப்புக்காக, எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri
