வங்கிகளில் வைப்பிடப்பட்டுள்ள சம்பள முற்பணம்: சந்தேகம் வெளியிடும் யாழ் பல்கலைக்கழக தரப்பு
நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், யாழ் பல்கலைக்கழகத்தினைச் சார்ந்த கல்விசாராப் பணியாளர்களுக்கு மே மாத சம்பள தினத்தில் சம்பள முற்பணம் வழமைபோன்று வங்கிகளில் வைப்பிடப்பட்டுள்ளமை சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 02.05.2024 மதியம் முதல் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் 23 நாட்களாக தொடர்ந்து நடைபெறுகின்றது.
இப்போராட்டத்தில் 17 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 12000 வரையிலான பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள முற்பணம்
இவ்வாறான சூழலில் யாழ் பல்கலைக்கழகத்தினைச் சார்ந்த கல்விசாராப் பணியாளர்களுக்கு மாத்திரம் சம்பள முற்பணம் வழமைபோன்று வங்கிகளில் வைப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் செயற்குழுவோ பொதுச்சபையோ எவ்வித கோரிக்கையினையோ வேண்டுகோளினையோ விடுக்கவில்லை என யாழ். பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |