ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்தியாவின் நிரந்தர இருப்பை விரும்பும் சஜித்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம்பெறுவதற்கான இந்தியாவின் நீண்டகால முயற்சியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆதரித்துள்ளார்.
இது "உலகளாவிய சக்தி யதார்த்தங்களை" அங்கீகரிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்தியாவின் அந்த முயற்சியை தாம் தொடர்ந்து ஆதரிப்பதாகவும் கூறியுள்ளார்.
பயணம்
இந்தியாவுக்கான தனது தற்போதைய பயணத்தின் போது ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்தியா சேர்க்கப்படுவது "சர்வதேச அரசியலின் நடைமுறை யதார்த்தங்களை அங்கீகரிப்பதாக இருக்கும்" என்றும் பிரேமதாச கூறியுள்ளார்.

இந்தியா - சீனா இயக்கவியல்
சிக்கலான இந்தியா - சீனா இயக்கவியலுக்கு மத்தியில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து கேட்டபோது, கொழும்பு அனைத்து நாடுகளுடனும் உறவுகளைப் பேணுகையில் புதுதில்லியுடனான அதன் "சிறப்பு மூலோபாய உறவை" மதிக்கிறது என்று பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |