மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த எதிர்கட்சி தலைவர் சஜித்
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் மன்னாரில் (Mannar) நேற்று (03.09.2024) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதற்கு மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே சஜித் பிரேமதாச மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்துள்ளார்.
தேர்தல் பிரசாரக் கூட்டம்
இதனைத் தொடர்ந்து, மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களும் பங்குபற்றியுள்ளனர்.
மேலும், இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹிருணிகா பிரேமச்சந்திர, அர்ஜுன ரணதுங்க, ஹுனைஸ் பாரூக், ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |























உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
