இலங்கை அரசாங்கம் போர் வீரர்களுக்கான கடமையில் இருந்து தவறிவிட்டதாக குற்றம் சுமத்தும் சஜித்
இலங்கை அரசாங்கம் போர் வீரர்களுக்கான கடமையை நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக ரஸ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நடந்து வரும் போரில் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ள படைவீரர்களின் அவல நிலையை அவர் எடுத்துரைத்துள்ளார்.
வெளிநாட்டு மோதல்
யுத்த வெற்றியின் பின்னர் போர் வீரர் சமூகத்திற்கான கடமையை உண்மையாக நிறைவேற்றியுள்ளோமா? என்று கேள்வி எழுப்பியுள்ள பிரேமதாச, துரதிஸ்டவசமாக இல்லை என்றே கூற வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வறுமையை எதிர்கொள்ளும் படைவீரர்கள், கஸ்டங்கள் காரணமாக கட்டாய இடம்பெயர்வு, மற்றும் வெளிநாட்டு மோதலில் கூட பங்கேற்பது போன்ற மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
எமது தேசத்தை விடுவித்த இந்த மாவீரர்கள் தற்போது இவ்வாறான சிரமங்களை எதிர்கொள்வது ஒரு சோகமான விடயம். அவர்கள் காப்பாற்றிய தேசமான நம்மால் ஏன் அவர்களின் துன்பத்தைப் போக்க முடியவில்லை. அவர்களைப் பாதுகாப்பது நமது பொறுப்பாகும்.
இந்தநிலையில். இந்த ஆண்டு முதல், நாட்டில் உள்ள போர்வீரர் சமூகம் அவர்களுக்குத் தகுதியான ஆதரவைப் பெறுவதை உறுதிசெய்யும் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தாம் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |