மட்டக்களப்பில் உணவக உரிமையாளர் ஒருவர் கைது
மட்டக்களப்பு ஓட்டுமாவடி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் தடைசெய்யப்பட்ட சட்டவிரோதமான சிகரட்டுகளை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று இரவு 9.00 மணியளவில் ஓட்டுமாவடி பகுதியிலுள்ள உணவக ஒன்றினை சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.
800 சிகரட்டுக்கள்
இதன் போது ஹோட்டல் மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத 800 சிகரட்டுக்களை மீட்டதுடன் உணவக உரிமையாளரை கைது செய்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவரையும் சான்று பொருளான சிகரட்டுக்களையும் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri
