நாட்டில் பிரச்சினை இல்லை எனக் கூறும் அரசாங்கம் பொருட்களின் விலைகளை உயர்த்துகிறது
நாட்டில் பிரச்சினகைள் எதுவுமில்லை எனக் கூறும் அரசாங்கம் பொருட்களின் விலைகளை உயர்த்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடு அபாத்தான பொருளாதார நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கி வருவதாகவும் அரசாங்கம் பொய்யான புள்ளவிபரங்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து அரசாங்கம் மூடிமறைப்பதாகத் தெரிவித்துள்ளார். பால் மா விலை, எரிபொருள் விலைகளை அரசாங்கம் உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் பால் மா விலை அதிகரிப்பானது நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையினாலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி கையிருப்பு மூன்று மாத இறக்குமதிகளுக்கு போதுமானதாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அராசங்கத்திடம் தற்பொழுது ஏழு பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பில் உள்ளதாகவும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். 2028ம் ஆண்டு முதல் நாடு கடன் செலுத்துகைகளை ஆரம்பிக்க வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரக் கட்டணங்களை குறைப்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அரசாங்கம் அளித்த போதிலும் அவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 16 மணி நேரம் முன்
அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் Cineulagam