சஜித்தின் அலுவலக ஊழியர் சுட்டுக்கொலை
கேகாலை - களுகல மாவத்தை பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கேகாலை களுகல்ல மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழியர்
கேகாலை-ஹம்புதுகல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர், களுகல்ல மாவத்தையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் ஊழியராவார்.
பொலிஸார் விசாரணை
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் எதிர்கட்சி அலுவலகத்தில் உள்ள அறையில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் மூன்றாம் தரப்பினரால் சுட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
