குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருமாறு சஜித்தின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்து தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன குற்றப் புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அழைப்பு
இன்று(12.01.2026) திங்கட்கிழமை காலை 10:00 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், இன்று ஒரு பொம்மை அரசாங்கமாக மாறிவிட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன விமர்சனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.