சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்பட்ட நபரிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் நபரொருவரிடமிருந்து 8 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று (11.01.2026) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சோதனை
உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது அவரிடமிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை சிறப்பு அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தேராவில் இளங்கோபுரம் பகுதியினை சேர்ந்த 38 அகவையுடைய நபரே கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விசாரணை
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த துப்பாக்கி ரவைகள் தேராவில் காட்டுப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும், துப்பாக்கி ரவைகளின் வெடி மருந்தினை மீன்பிடி நடவடிக்கைகக்காக பயன்படுத்தும் நோக்கில் தாம் எடுத்ததாகவும் சந்தேகநபர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சந்தேகநபரையும், சான்றுபொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையை பொலிஸார் எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணையையும் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri