பட்டப்பகலில் தென்னிலங்கையை கதிகலங்க வைத்த சம்பவம்! யாழில் அதிகாலையில் சுற்றி வளைக்கப்பட்ட வீடு
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர இன்றையதினம்(22) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அத்தோடு, இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இந்தப் படுகொலை தொடர்பில் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களும் தற்போது வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
இந்தநிலையிலே பாதாள உலகக் கும்பலுக்கும் தமது கட்சியினுடைய உறுப்பினர்கள் யாருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என நேற்றையதினம்(21) ஐக்கிய மக்கள் சக்தியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து, இன்றையதினம் ஐக்கிய மக்கள் சக்தியினுடைய வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்.
அத்தோடு, பிரதேச சபைத் தலைவர் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்களும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
